பல்வேறு பொறியியல் துறைகளில் தற்காலத் தொழில்நுட்பத்துடன் பொருந்தக்கூடிய தரமான தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதை தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி தனது இலக்காகக் கொண்டுள்ளது. மாணவர்களிடையே அடிப்படை ஞானம் தெளிவாகவும் வலுவாகவும் இருப்பதை நிறுவனம் முதலில் உறுதி செய்கிறது.
இக்கல்வி நிறுவனத்தில் கற்கும் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்படுகிறார்கள்.
அடிப்படை ஞானத்தை வளர்க்கும் அதே வேளையில் அதை திறமையாக உபயோகிக்கத்
தேவையான முக்கியப் பண்பான பயன்பாட்டுத் திறனையும் இணைந்து வளர்ப்பதில்
முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது....
மேலும் வாசிக்க
வெற்றியை நோக்கிய பயணத்தைத் துவக்க, தொலைநோக்கு, தயார்நிலை மற்றும் மூலோபாயம் போன்ற கருவிகள் இன்றியமையாதது. கற்றலின் பாதையில் நம்மை இட்டுச் செல்ல இவை நமக்கு உதவுகின்றன.
மாணவர்கள் கற்கும் கல்வியின் ஒவ்வொரு துளியும் அவர்களுக்கு
முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ஒரு கல்வி நிறுவனம் இந்த மூன்று சக்திகளையும்
ஒருங்கிணைத்து உட்கிரகித்தல், தன்மயமாக்கல்
மற்றும் பயன்படுத்துதல் இவற்றிற்கு ஏற்ப
கல்வியைத் தொகுத்து வழங்குவது தவிர்க்க
முடியாத ஒன்றாகும்....
மேலும் வாசிக்க
தோற்றம், செயல், பணி இவற்றிற்காகப் பாராட்டுப் பெற்று பிறருக்கு உபயோககரமாக இருக்கும் தயாரிப்புகள், சேவைகளை உருவாக்கி வெளிக்கொணர உதவும் செயல்முறை ஞானத்தை வழங்குவதே கல்வி.
அறிவியல் ஞானத்தை உணரக்கூடிய தோற்ற நிலையில் வெளிக்கொணர்ந்து, நாம் நமது வாழ்க்கையை
வசதியாகவும், சுவாரஸ்யமாகவும், அதன் சிறப்புணர்ந்து வாழவும் வழி செய்யும் வலிமையையும் திறனையும்
பொறியியல் கொண்டு வருகிறது,
மேலும் வாசிக்க
தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாகக் கல்விப் பணியாற்றும் பாலிடெக்னிகளில் சென்னையிலுள்ள தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியும் ஒன்றாகும். செய்முறைக் கல்வி சார்ந்த பொறியியல் கல்வியைக் கற்க சென்னையைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வம் காட்டிய காலகட்டத்தில், 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட திருமதி. கண்ணம்மாள்கல்வி அறக்கட்டளை, தொழில்நுட்ப கல்வித துறையில் பெரும்மாற்றத்தைக் கொண்டுவரும் உன்னத சிந்தனையுடன் தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியைத் துவக்கியது.
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அங்கமான டாக்டர் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியின் பகுதியாக விளைங்கும் தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல புதுமையான திட்டங்களை வகுத்து, சென்னை, ஆரணி மற்றும் பெங்களூருவில் 3 தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளைகளை நிறுவியுள்ள திரு ஏ.சி.சண்முகம் அவர்களால் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது, அவர் னார். கல்வி நிறுவனங்களைச் செயலாக்குவதில் அவர் ஒர் உந்து சக்தியாக இருந்து வருகிறார்.
தாய் மூகாம்பிகாய் பாலிடெக்னிக் கல்லூரியில் சுற்றுப்பயணம் செய்யுங்கள், நீங்கள் மாநிலத்தின் சிறந்த பாலிடெக்னிக் கல்லூரியைக் காண்பீர்கள்.